மரணித்த நடிகர் விவேக் நடிப்பில் வெளிவரவுள்ள மூன்று திரைப்படங்கள் : என்னென்ன தெரியுமா?

மரணித்த நடிகர் விவேக்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர் தான் நடிகர் விவேக், இவரை பலரும் சின்ன கலைவாணர் என்று தான் அழைப்பார்கள்.

கடந்த 20 வருட காலங்களாக தமிழ் சினிமாவை கலக்கி வந்த விவேக் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று அவர் மரணமடைந்தார், இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே சோகத்திற்கு உள்ளாகியது.

நடிகர் விவேக் நடிப்பில் வெளிவரவுள்ள மூன்று திரைப்படங்கள் குறித்து தான் நாம் பார்க்கவுள்ளோம். நடிகர் விஜய் சேதுபதியுடன் விவேக் நடித்துள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர், இப்படம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும் அவருடன் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விவேக். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமலுடன் விவேக் நடித்து வந்தார், இதன் காட்சிகள் ஏற்கனவே படமாக பட்டுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே ஷங்கர் விவேக் நடித்துள்ள அந்த காட்சிகளை டப் செய்து வெளியிடுவாரா அல்லது விவேக்கின் கதாபாத்திரத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You might also like