அஸ்வினுக்கு இப்படி ஒரு அதிஷ்டமா..? குக்வித் கோமாளி பைனலுக்கு பிறகு இப்படி ஒரு மாற்றமா..? குஷியில் ரசிகர்கள்

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனைத்து பிரபலங்களுக்கும், படவாய்ப்புகள் கிடைத்து விட்ட நிலையில் அஸ்வினுக்கு மட்டும் இதுவரை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது அவர் ஹீரோவாக அறிமுகமாக உள்ள புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. மேலும் பல பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பதாக கூறிவந்தனர். வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியான இதில் கலந்து கொள்ளும் குக்குகளை விட கோமாளிகளாக இருக்கும் புகழ், ஷிவாங்கி, சுனிதா, பாலா, தங்கதுரை, ஆகியோருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற குக்குகள் முதல் கோமாளிகள் வரை அனைவருக்குமே, அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக புகழ் நடிகர் அருண்விஜய், சந்தானம், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், அதேபோல் சிவகார்த்திகேயன் நடத்தில் ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பவித்ரா லட்சுமி, காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷகிலாவும், தெலுங்கு, தமிழ் என அடுத்த சில படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து பிரபலங்கள் பலர் படத்தில் கமிட் ஆகி நடித்து வந்த நிலையில், அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் ஃபைனல் முடிந்த கையேடு அஸ்வின் தற்போது ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தை… டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் தேர்வும் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அஸ்வின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

You might also like