உலகளவில் முன்னிலை வகிக்கும் இலங்கை! ஐரோப்பிய நாடுகள் பின்னடைவு

உலக அளவில் இலங்கை தீவிர மதப்பற்றுடைய நாடுகள் பட்டியலில் முன்னணி வகிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது..

99 வீதமான இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய சர்வதேச ஊடகமொன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகமான Telegraph கடந்த 2008, 2009 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் மக்களும் தங்கள் மத ரீதியான உணர்வுகளை கொண்டுள்ளார்களா என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆய்விற்கமைய, 5 நாடுகள் இந்த பட்டியலில் ஒரு இடத்தில் காணப்படுகின்றது. இலங்கை, எத்தியோப்பியா, மலாவி, நைஜர் மற்றும் யெமன் ஆகிய நாடுகள் இவ்வாறு ஒரே இடத்தில் உள்ளன. இந்த நாட்டினரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது 99 வீதமானவர்களின் பதில் ஆம் என்றே காணப்பட்டுள்ளது.

புருண்டி ட்ஜிபவ்ட்டியால், மவுரித்தேனியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் 98 வீதமானோர் ஆம் என பதிலளித்துள்ளனர்.

ஆய்வின் முடிவிற்கமைய பல தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நம்பிக்கை முக்கியமாக காணப்படுகின்றதெனவும், இத்தாலி நாடு இந்த ஆய்விற்கமைய 74 வீத மத உணர்வை கொண்டுள்ளதாகவும், கிரேக்கம் 71 வீத உணர்வையும் கொண்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் போலத்து அதிகளவான மத நம்பிக்கையை கொண்டுள்ளது. அங்கு 86 வீதமானோர் அங்கு ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

பிரித்தானியாவில் மூன்றில் 10 வீதமானோரே மத ரீதியான உணர்வுகளை கொண்டுள்ளனர்.

இந்த பட்டியலில் ஆக குறைவான மத ரீதியான உணர்வை கொண்ட நாடுகளில் ஜப்பான், எஸ்டோனியா, சுவீடன், நோர்வே மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் காணப்படுகின்றது. அவை 7 வீதமான உணர்வை கொண்ட நாடுகளாகும்.

You might also like