தனது ஏழு சகோதரிகளுக்காக ஆட்டோ ஓட்டிய பெண் : அவருக்கு சமந்தா குடுத்த பரிசு என்ன தெரியுமா..?

ஏழு சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ…

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா ஒரு தொலைக்காட்சியில் நடைபெற்ற டாக் ஷோ ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், தனது பெற்றோர் இ.றந்துவிட்டதாகவும், அதனால் தனது ஏழு சகோதரிகளை காப்பாற்ற தான் ஆட்டோ ஒட்டி சம்பாதிப்பதாகவும் அந்த வருமானம் போதுமானதாக இல்லை எனவும் தனது கஷ்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதை கேட்ட சமந்தா, அப்போதே அவருக்கு ஒரு கார் வாங்கி தருவதாகவும் அதை வைத்து ட்ராவல்ஸ் நடத்தி இன்னும் அதிகப்படியான வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் அவருக்கு நம்பிக்கை வாக்குறுதி அளித்தார்.

தற்போது சொன்னபடி செய்தும் காட்டி விட்டார் சமந்தா. ஆம். சுமார் 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு பரிசாக அளித்து, அவரது வாழ்க்கையில் புதிய வாசலை திறந்துவிட்டுள்ளார் சமந்தா. அவரது இந்த உதவும் குணம் பற்றித்தான் தற்போது சோஷியல் மீடியாவில் ஒரே பேச்சாக இருக்கிறது.

You might also like