கீர்த்தி சுரேஷிற்கு படப்பிடிப்பு தளத்தில் என்ன ஆச்சு : பதற்றத்தில் ரசிகர்கள்

கீர்த்தி சுரேஷுக்கு என்ன…

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ, கீர்த்தி சுரேஷுக்கு எதுவும் ஆகலையே, அவர் பாதுகாப்பாக தானே இருக்கிறார் என சோசியல் மீடியா மூலமாக நலம் விசாரித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகையே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் எக்கச்சக்க ரசிகர்களைக் கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு ‘மகாநடி’ திரைப்படத்திற்கு தேசிய விருது மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமைந்தது.

திரையுலகில் கவர்ச்சி காட்டினால் தான் நடிகையாக நீடிக்க முடியும் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு கீர்த்தி சுரேஷ் தன்னுடைய அசத்தலான நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நிறுத்தப்பட்ட ‘அண்ணாத்த’ ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாவுக்கு ஜோடியாக ‘சர்காரு வாரி பாட்டா’ என்ற தெலுங்கு படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படம் மூலமாக கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்திருந்தனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது. கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்கும் செட்டிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ, கீர்த்தி சுரேஷுக்கு எதுவும் ஆகலையே, அவர் பாதுகாப்பாக தானே இருக்கிறார் என சோசியல் மீடியா மூலமாக நலம் விசாரித்து வருகின்றனர்.

You might also like