விஷ்ணு விஷால் யாரை மணந்தார் தெரியுமா..? புகைப்படம் இதோ

நடிகர் விஷ்ணு விஷால்

பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ஐதராபாத்தில் இன்று(ஏப்., 22) திருமணம் செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால். இவர் தனது முதல் மனைவி ரஜினியை பிரிந்த பிறகு இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்தார். சமீபத்தில் காடன் பட ரிலீஸின்போது ஜுவாலாவை விரைவில் திருமணம் செய்ய போவதாக விஷ்ணு விஷால் அறிவித்தார். இரு வாரங்களுக்கு முன் ஏப்., 22ம் தேதியான இன்று இவர்கள் திருமணம் நடப்பதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது கொரோனா காலம் என்பதால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஐதராபாத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்க இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. மணக்கோலத்தில் விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா இருக்கும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அதோடு திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சில போட்டோஷுட் படங்களும் வெளியாகி உள்ளன.

You might also like