வில்லன்களுடன் மாஸ் காட்ட தயாராகும் காஜல் : அடுத்த பட அப்டேட் இதோ

இயக்குனர் கல்யான் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் சண்டை பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபுதேவா நடித்த குலோபகவல்லி, ஜோதிகா நடிப்பில் வெளியான ஜாக்பாட் திரைப்படங்களை இயக்கிய கல்யாணின் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் காஜல் அகர்வால். ஹாரர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் காஜல். இந்த திரைப்படத்தில் அவருக்காக பல ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகவும், அதற்காக அவர் பயிற்சி எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது எல்லாம் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது காஜல் அகர்வாலும் ஆக்ஷன் காட்சிகளில் கலக்க இருக்கிறார். அண்மையில் காஜல் அகர்வால் நடிப்பில் ஓடிடி ரிலீசாக ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் வைபவ், கயல் ஆனந்தி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹாரர் திரைப்படமாக வெளியான ‘லைவ் டெலிகாஸ்ட்’ ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரபுதேவா நடித்த ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கும் புதிய படத்தில் காஜல் அகர்வால் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘லைவ் டெலிகாஸ்ட்’ திரைப்படத்தை போன்று, இந்த படமும் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு பிரத்யேகமாக சண்டை காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இதற்காக அவர் தற்போது ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஜல் அகர்வாலுக்கான சண்டை பயிற்சியை ஜெகன் மாஸ்டர் கற்றுத்தந்து கொண்டிருப்பதாகவும் இயக்குனர் கல்யாண் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஆரத்தி என்ற போலீஸ் கேரக்டரில் காஜல் அகர்வால் நடித்து வருவதாகவும், அவருக்கு இந்த படத்தில் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் உள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பிப்ரவரியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாகவும், இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருப்பதாகவும் கல்யாண் கூறியுள்ளார்.

‘கோஸ்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு, ஜெகன், லிவிங்ஸ்டன், சுரேஷ் மேனன், மயில்சாமி, மனோபாலா, ஆடுகளம் நரேன் உட்பட ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ஜோடி இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

You might also like