கொரோனாக்கு மாஸ்க் போட ஏலா : நானும் எரியா ரவுடி தான் பொலிஸை மிரட்டிய பெண்

மாஸ்க் போடலன்னா அபராதமா

தஞ்சையில் முக கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், ”நானும் ரவுடிதான்… அபராதமெல்லாம் கட்ட முடியாது என காவலரையே மி.ரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் ஸ்கூட்டரில் ஒரு பெண் வந்துள்ளார். அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார் 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு கூறியுளளனர். இதனால் ஆத்தி.ரமடைந்த அந்த பெண் காவலரை பார்த்து, இத்துனோண்டு மாஸ்குக்கு 200 ரூபாய் கட்ட சொல்றிங்களே உனக்கு அசிங்கமா இல்லையா என கேள்வி கேட்டுள்ளார் அந்த பெண்.

அதற்கு ”கலெக்டரை போய் கேளுமா” என்று கூறிய காவலரிடம், ” யோவ் கலெக்டரை கூப்பிடு அவன நானே கேட்கிறேன். எவனாயிருந்தாலும் மானத்தை வாங்கி விடுவேன்” என முகத்தில் போட்டு இருந்த கண் கண்ணாடியை கழட்டி ஆவேசமாக பேசியுள்ளார்.

இதனை பணியில் இருந்த சக காவலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனையடுத்து அவரிடம், ”வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுறியா போடு, ஜெயில்ல போடுவியா போடு” என்று தகாத வார்த்தையால் தெனாவட்டாக பேசிய அந்த பெண் தோளில் போட்டிருந்த ஷாலை இழுத்து விட்டு கொண்டு ”நானும் ரவுடிதான் தான் பாத்துக்க” என்று காவலரிமே மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

பொது இடங்களில் விதிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, அபராதம் விதித்தற்கு மாவட்ட ஆட்சியரையும் காவல்துறையினரையும் அவமரியாதை செய்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கிருந்த பலரும் கூறி சென்றனர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், மானோஜ்பேட்டையைச் சேர்ந்த நந்தினி என்ற அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

You might also like