யாழில் இளைஞரும் யுவதியும் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணத்தில் இரு வேறு பகுதிகளில் இருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்னர்.

வடமராச்சியை சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட புலோலி திகிரி பகுதியை சேர்ந்த 57 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையும், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட அல்வாய் பகுதியை சேர்ந்த 19 வயது யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

புலோலியில் உயிரிழந்தவர் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணையை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

அல்வாயில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணையை மேற்கொண்டு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இருவரது சடலங்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் குறித்த இருவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

You might also like