ரோஜா சீரியலில் நடிக்கும் இந்த நடிகை அஜித்துக்கு ஹீரோயினாக நடித்துள்ளாரா!! அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் தல அஜித். தற்போது இவர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்க ஹெச் வினோத் இயக்குகிறார். இதனைத்தொடர்ந்து தனது 61வது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பொதுவாக சில நடிகைகள் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருந்தாலும் பெரிதாக சீனிமாவில் பிரபலமடைய மா ட்டார்கள்.அந்த வகையில் அஜித்க்கு ஜோடியாக நடித்திருந்த பிரபல நடிகை தற்போது சீரியலில் நடித்து வருகிறார். இது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் அஜித் மற்றும் விஜய் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராஜாவின் பார்வையிலே. இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை காயத்ரி. இவர் சினிமாவில் சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால் இவர் நடித்திருந்த எந்த திரைப்படங்களும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தராத காரணத்தினால் தற்போது சின்னத்திரையில் சீரியலில் நடித்து வருகிறார். ஆம்,அந்தக் காயத்ரி வேறு யாருமில்லை சன் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரோஜா சீரியலில் ரோஜாவின் மாமியாராக நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி.

You might also like