வராரு விடியல் தர போறாரு வெளியான தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் ஆட்சியமைக்கபோறவர் யார்? சொல்லுங்க பார்பம் : விபரம் உள்ளே

அதிமுக இரு இடங்களிலும் திமுக இரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 75 இடங்களிலும் திமுக 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

பாஜக மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மநீம சார்பில் முன்னிலையில் உள்ளார்.

பாமக 6 தொகுதியிலும், விடுதலை சிறுத்தைக் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் இரு தொகுதியிலும் , இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) இரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

எடப்பாடி தொகுதியில் மொத்தம் 28 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 92, 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ’திமுகவை ஆறாவது முறையாக ஆட்சியமைக்க கட்டளையிட்ட மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி’ என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

You might also like