நடிகர் அஷ்வினை பார்த்தவுடன் இதனா தோன்றியது ஷிவாங்கி ஓபன் டாக்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் படு அதிகம். இந்நிகழ்ச்சியை பற்றி பேசாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

சமையல் நிகழ்ச்சி என்றாலும் மக்கள் இதில் வந்த கலாட்டக்களை பார்த்து அதிகம் ரசித்தார்கள். இரண்டாவது சீசன் முடிந்துவிட்டது, 3வது சீசனிற்காக தான் ரசிகர்கள் எல்லோரும் வெயிட்டிங்.

ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதம் 3வது சீசன் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் ஷிவாங்கி, அஷ்வின் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், குக் வித் கோமாளி 2 செட்டில் அஷ்வினை முதன்முறையாக பார்த்த போது இவ்வளவு அழகான ஒருவர் சமைக்க வந்துள்ளாரே என தோன்றியது.

ரொம்பவே டெடிகேட் ஆன ஆள், என் வளர்ச்சியை பார்த்து அவரும், அவரது வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சியடைவோம் என கூறியுள்ளார்.

You might also like