வவுனியாவில் நான்கு யானைகள் கிணற்றினுள் : காப்பாற்ற முற்பட்டவர்கள் மீது தாக்க முயற்சி

வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் இன்று (16.04.2017) காலை 8.30மணிமுதல் இரண்டு குட்டியானைகளும் இரண்டு பெரிய யானைகளும் கிணற்றிள் வீழ்ந்துள்ளது

ஒமந்தை கொம்புவைத்தகுளத்தில் நான்கு யானைகள் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக வவுனியா ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வன விலங்கு ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவலை வழங்கினார்கள்.

ஆனால் மாலை 4.00மணியாகியும் வன விலங்கு ஜீவராசிகள் சழூகமளிக்காமையினால் பொதுமக்களின் உதவியுடன் ஒமந்தை பொலிஸார் சுமார் 5மணித்தியாளங்களாக போராடி இரண்டு குட்டி யானைகளை மீட்டேடுத்தனர்.

இதன் போது மீட்டேடுக்கப்பட்ட குட்டியானையோன்று அவ்விடத்தில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொதுமக்களையும் தாக்க முற்ப்பட்டது. இதன் போது இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

எனினும் இரவில் தொடர்ச்சியாக மீட்பு பணியினை தொடர முடியாமையினால் தற்போது இரு பெரிய யானைகளும் கிணற்றினுள் உயிருக்கு போராடிய நிலையில் இவ் மீட்பு பணி நாளை ( 17.04.2017) காலை தொடரவுள்ளதாக  உள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

You might also like