கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி இருவர் படுகாயம்

கிளிநொச்சி பூநகரி முட்கொம்பன் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த யாழ். போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம் பூநகரி பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திரும்பியது.

இதன் போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பிரதான வீதியிலிருந்து முட்கொம்பன் வீதிக்கு திரும்ப முற்பட்ட வாகனத்தை முந்திச் செல்ல மோட்டார் சைக்கிள் முற்பட்ட போதே விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பரமன்கிராய் பூநகரியைச் சேர்ந்த 52 வயதுடைய சுப்பையா சிவகுருநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like