கரட் தொண்டையில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை

அம்பலந்தொட – மிரிஜ்ஜவில பகுதியில் கரட் தொண்டையில் சிக்கியதால் பச்சிளம் குழந்தையின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது.

ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை குழந்தைக்கு வழங்கிய உணவில் இருந்த கரட் துண்டு தொண்டையில் சிக்குண்டுள்ளது.

பின்னர் குழந்தையை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது குழந்தை உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You might also like