வீட்டில் இடம்பெற்ற மோதல் காரணமாக முன்னாள் பிரதியமைச்சர் தற்கொலை!

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரதி அமைச்சர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

வீட்டில் இடம்பெற்ற மோதல் காரணமாக அவர் வீட்டில் இருந்து செல்லும் போது தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு சென்றதாக அவரது மனைவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சருக்கு வேறு பெண்ணுடன் தொடர்புள்ளமை தொடர்பில் ஏற்பட்ட முரன்பாடு காரணமாகவே அவர் வீட்டை விட்டு சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் வீட்டை விட்டு சென்று 2 நாட்களை கடந்துள்ள போதிலும், அவர் வீட்டிற்கு வருகை தராமை மற்றும் அவரது தொலைபேசி செயற்படாமையினால் அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் அவரை தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்த நிலையில், அவர் மகிழ்ச்சியாக மட்டக்களப்பு பகுதியில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

You might also like