வெளிநாடொன்றில் 15 வருடங்களாக கொடுமைகளை அனுபவித்த இலங்கை பெண்

வெளிநாடொன்றில் பல வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார்.

தனது பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு தேடி பணிப்பெண்ணாக லெபனான் சென்ற பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஹஸசல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே பல கொடுமைகளை அனுபவித்த பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

பல எதிர்பார்ப்புகளுடன் லெபனானுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் 15 வருடங்களின் பின்னர் வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளார்.

15 வருடங்களாக பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக இநோக்கா உதயங்கனி கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி இலங்கை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு அதன் பின்னர் அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

அதற்கமைய இநோக்காவின் உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் வாக்குறுதியளித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் பணம் சம்பாதிக்கும் கனவுடன் வெளிநாடு சென்றவர் 15 வருடங்களின் பின்னர் வெறும் கையுடன் நாடு திரும்பியிருந்தார்.

You might also like