திருமணமாகி ஒரு மாதத்தில் திடீரென உயிரிழந்த இளம் பெண்

கண்டியில் திருமணமான இளம் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்ததாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அழகு கலை நிபுணரான லக்மினி என்ற பெண் ஒருவரே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவர் தனது துறை மூலம் பலரது மனங்களை வென்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மார்ச் மாதம் 13ம் திகதி லக்மினியின் திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் புகைப்பட கலைஞராக செயற்பட்டு வருகின்றார்.

திருமணம் நடந்து ஒரு மாதத்திற்குள் திடீரென அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி அதிகரித்தமையினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள் சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவரது நோய் தீவிரமடைந்துள்ளது.

அவரது நுரையீரலில் கிருமி நுழைந்துள்ளமையினாலே அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக லக்மினியின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கண்டி பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றவர். அவரது துறையில் மிகவும் பிரபலமான ஒருவராக செயற்பட்டுள்ளார் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

You might also like