பேஸ்புக்கில் இளம் பெண்ணின் ஆபாச படத்தை வெளியிட்ட பொலிசார்: அதிர்ச்சி சம்பவம்

பேஸ்புக்கில் பெண் ஒருவரை பற்றி ஆபாசமாக எழுதியதோடு மட்டுமில்லாமல், அவர் புகைப்படத்தை பதிவேற்றிய பொலிசாரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்தவர் மகாலட்சுமி (40) இவர் அந்த ஊர் பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

அந்த மனுவில், சென்னையில் பொலிசாக வேலை பார்த்து வரும் சிவ சந்திரன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவர் பேஸ்புக்கில் ஒரு குருப்பை ஆரம்பித்தார்கள்.

அதில் நானும் இணைந்தேன். குரூப்பில் இருந்த 30 பேர் கடந்த 2 மாதத்துக்கு முன் டூர் சென்றோம். அப்போது நாங்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம்.

இந்நிலையில், சிவசந்திரனும், ஈஸ்வரனும் சமீபத்தில் பிரிந்து விட்டனர். இதையடுத்து என்னையும் சிவசந்திரனையும் இணைத்து ஆபாசமாக ஈஸ்வரன் பேஸ்புக்கில் எழுதி வருகிறார்.

போட்டோவும் போடுகிறார். இதற்கு அவரின் நண்பர் உதவுகிறார். இது பற்றி ஈஸ்வரனிடம் நான் கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது

You might also like