மகளிர் விடுதியில் நள்ளிரவில் 3 மாணவிகளிடம் இளைஞர் செய்த சேட்டை?

தமிழகத்தில் மகளிர் கல்லூரி விடுதி உள்ப்ட பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருடிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோஸ். இவர் இரவு ராமன்புதூர் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது கீழ பெருவிளை பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்பவர், அவரை தடுத்து நிறுத்தி பணம் தருமாறு மிரட்டியுள்ளார். ஆனால் அவரோ தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிஷாந்த், தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து அந்தோணி ஜோசை வெட்ட முயற்சி செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அந்தோணி ஜோஸ், தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்துள்ளார். அப்போது நான் கேட்டவுடன் பணம் தர மாட்டாயா என்று அவரை மீண்டும் அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர் அப்பகுதியை விட்டு தப்பி ஓடியுள்ளார். அதன் பின் அவர் பொலிசில் இது தொடர்பாக புகார் அளித்தார்.

அவரிடம் நடந்த விசாரணையில் அவர் பல்வேறு இடங்களில் செல்போன் திருடியது தெரிய வந்தது.

நாகர்கோவிலில் மகளிர் கல்லூரி ஒன்றின் விடுதிக்குள் நள்ளிரவில் நுழைந்து 3 மாணவிகளின் செல்போன்களை திருடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நிஷாந்துக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

You might also like