விஜய் படத்தில் நடிக்க மகேஷ் பாபு இப்படி ஒரு கண்டிஷன் போடுகிறாரா?

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோ. இவர் டோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்னும் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை பிரம்மிக்கவைத்தது.

சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் விஜயுடன் நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவருடன் நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.

ஆனால் அவருக்கும் எனக்கும் சமமான கதாபாத்திரம் இருக்க வேண்டும். அப்படியானால் நிச்சயம் நடிப்பேன். அப்படி ஒரு படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களால் முடியும் என கூறினார்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து “பொன்னியின் செல்வன்” என்னும் படத்தில் நடிக்க இருந்து பின் அப்படம் நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.

You might also like