வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியாவில் இன்று (17) தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார்  சடலத்தினை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா வெளிக்குளம் பகுதியில் வசித்த வந்த பி. எம். சுகுமார் 61வயதுடைய குடும்பஸ்தர் இன்று காலை 5மணியளவில் வேட்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டின் முன்பகுதியில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், மரண விசாரணை அதிகாரி சடலத்தினை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கில் தொங்கியவர் ஜந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் நில அளவைத்திணைக்களத்தில் முன்னர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like