நடிகர் விக்ரமுடன் நடித்த பேபி சாராவும் அவரது நிஜ அப்பாவும் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? என்னது அவங்க அப்பா ஒரு நடிகரா…?

பேபி சாரா சிறுவயது முதலே ஹிந்தி விளம்பரப் படங்களிலும் மற்றும் குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார்.தெய்வத்திருமகள் படத்தில் மனநலம் குன்றிய விக்ரமின் மகளாக தோன்றி நடிப்பில் அசத்தி இருப்பார். அந்த வருடம் வெளியான குழந்தைகளுக்கான விருதுகள் மொத்தத்தையும் இவரே அள்ளிச் சென்றார் அதன் பிறகு மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சைவம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த விழித்திரு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் சில்லுக்கருப்பட்டி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தெய்வத்திருமகள் திரைப்படத்தை தொடர்ந்து சித்திரையில் நிலா சோறு, சைவம் ,விழித்திரு என சில திரைப்படங்களில் நடித்திருந்தார், தற்பொழுது ஹலிதா ஷமீம் என்ற பெண் இயக்குனர்

இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.தமிழில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன்.

இதன்பின் சைவம், விழித்திரு என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் ஹிந்தியில் வெளியான பல திரைப்படங்களில் முக்கியமானக் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் தற்போது மணி ரத்னம் இயக்கி வரும் பிரமாண்ட படைப்பான, பொன்னியின் செல்வனில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சாரா அர்ஜுன், பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் தானாம்.நடிகர் ராஜ் அர்ஜுன் ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். மேலும் தமிழில் வெளியான தாண்டவம், தலைவா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like