கிளிநொச்சியில் 57 ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம்

தங்களது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர்ந்தும் 57 ஆவது நாளாகவும் இன்று(17) கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகள் தொடர்பில் எந்தவித பதிலையும் அரசாங்கம் வழங்காத நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்து வருகின்றது.

நல்லாட்சி அரசு ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் தங்களது உறவுகள் தொடர்பில் இதுவரை எந்த பதில்களையும் தரவில்லை.

தங்களது உறவுகளைத் தடுத்து வைத்துள்ள மறைமுக தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like