கிளிநொச்சியில் அதிநவீன வசதிகளுடன் மூதாதர் அன்பு இல்லம்

கிளிநொச்சியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள வசதிகளுடன் கூடிய மூதாதர் அன்பு இல்லம் ஒன்று அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

நேற்றைய தினம் பத்துமணியளவில் கிளிநொச்சி டிப்போசந்திக்கு அருகாமையில் உள்ள அன்பே சிவம் மாற்றுத் திறனாளிகளுக்கான  கற்கை நிலையத்தில்  அன்பே சிவத்தினுடைய இலங்கைக்கான இணைப்பாளர் குமணன் தலைமயில் நடைபெற்ற அன்பே சிவத்தினுடைய எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக நடைபெற்ற கலந்துரையாடலிலே இத் தீர்மானம் எடுக்கப்படுள்ளது

இவ் மூதாதர் அன்பு இல்லமானது கிளிநொச்சிப் பகுதியில் அமைப்பது  எனவும் இதனை  வெகு விரைவில்  அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

இக் கலந்துரையாடலில்  சுவிஸ் சூரிச் சிவன்கோவில் தலைவர் இராதாகிருஷ்ணன் ,அன்பே சிவத்தினுடைய இலங்கைக்கான தலைவர் அருளானந்த சோதி மற்றும் மாவட்ட இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

குறித்த அன்பே சிவம் அமைப்பானது கடந்த இரண்டாயிரத்து பத்தாமாண்டுமுதல் தாயகப் பகுதியில் தனது சேவையை  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

sdr
dav
dav
dav
dav
sdr
sdr
dav
You might also like