கிளிநொச்சியில் நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தில், பெப்ரவரி 20ஆம் திகதி முதல், உறவினர்களால்  முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம், 57ஆவது நாளாக இன்று தொடர்கிறது.

இந்நிலையில், குறித்த போராட்டத்தின் வடிவத்தை மாற்றி வேறு வடிவத்தில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான விசேட  கலந்துரையாடல்,  கிளிநொச்சி கந்தசாமி கோவில் அன்னதான மண்டபத்தில்  நாளை  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, கிளிநொச்சியில் உள்ள   அனைத்துப் பொது  அமைப்புக் களையும் இவ் விசேட கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You might also like