கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத்தில் 64 ஆண்டுகளாக நிரந்தர வீதி அமைக்கப்படவில்லை’

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் கிராமத்தில் கடந்த 64 ஆண்டுகளாக நிரந்தர வீதி அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குண்டும் குழியுமான செம்மண் புழுதி நிறைந்த வீதி வழியாகவே தாம் பயணிக்க வேண்டி இருப்பதன் காரணமாக, வன்னேரிக்குளத்துக்கு நிரந்தர வீதியினை அமைத்துத் தருமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“1953ஆம் ஆண்டு வன்னேரிக்குளம் கிராமம் உருவாக்கப்பட்டது. இக்கிராமத்தில் தற்போது ஐந்நூறு வரையான குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் இக்கிராமத்துக்கு நிரந்தர வீதி உருவாக்கப்படவில்லை.

30 கிலோமீற்றர் தூரத்தில்  உள்ள கிளிநொச்சி நகரத்துக்கு செல்ல,  சேதமடைந்த வீதி வழியாகவே பயணிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, வன்னேரிக்குளம் கிராமத்துக்கும் அக்கராயன் கிராமத்துக்கும் இடையிலான 10 கிலோமீற்றர் வீதி, கடுமையாக சேதமடைந்து உள்ளது” என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like