கிளிநொச்சியில் சாரதியின் கேள்விக்கு பதில் தேடிய பொலிஸார் : வெள்ளைக்கோடு எங்கே?

கிளிநொச்சி A9 பிரதான வீதியில் வீதி ஒழுங்கு குறியீட்டு நிறங்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிளிநொச்சி டிப்போச் சந்தியில்; கடமையாற்றும் போக்குவரத்துப் பொலிஸர் இவ்வாறாக தெளிவற்ற வீதி ஒழுங்கு நிறங்களை காரணம் காட்டி குற்றத்தை பதிவு செய்வதாக அங்கு சென்ற சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன்படி இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் முறையான சமிக்ஞைகள் காண்பித்து வலது பக்கமாக கனகபுரம் வீதி வழியே பயணத்தை தொடர முற்பட்டுள்ளார்.

அச்சமயம் அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸர் குறித்த இளைஞனை வழிமறித்துள்ளனர்.

பின்னர் குறித்த இளைஞன் வீதி ஒழுங்கைப் பின்பற்றவில்லை என்று பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீங்கள் கண்டு பிடித்த குற்றம் தொடர்பில் எனக்கு விளக்கத்தை தருமாறு பொலிஸாரிடம் அந்த இளைஞன் கேட்டுக்கொண்டர்.

வீதியில் நடுவே காணப்படும் வெள்ளைக்கோட்டின் மேலாக நீங்கள் பயணித்தமை குற்றம் என்று பொலிஸார் விளக்கம் கூறியுள்ளார்.

இந்த குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்னர் நான் தற்பொழுது திரும்பிய வழியே வெள்ளைக்கோடு எதும் காணப்படவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் எனக்கு காண்பியுங்கள் என்று அந்த இளைஞன் கேட்டுள்ளார்.

குறித்த வீதி திருப்பத்தில் விதி ஒழுங்கு குறியீட்டு நிறங்கள் முற்றாக அழிந்திருப்பதனால் அந்த இளைஞனின் கேள்விக்கு பொலிஸாரினால் பதில் வழங்க முடியாது போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த குற்றத்தினை நிராகரித்த பொலிஸார் அந்த இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த வீதி திருப்பத்தில் இவ்வாறு குறியீட்டு நிறங்கள் தெளிவற்று காணப்படுவதினால்; சாரதிகள் அசௌகரியங்களை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவ்வாறு விதி ஒழுங்கு சமிக்ஞைகளை தெளிவாக காண்பிப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு வாகன வரி செலுத்தும் சாரதிகள் உரிமையுடன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like