நாட்டில் பாதுகாப்பு கேள்விக்குறி?- காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

அண்மையில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போயிருந்தார்.

கடந்த 4ம் திகதி இந்த பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போயிருந்தார்.

புத்தளம் நிலம்பே ஆற்றுக்கு அருகாமையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தருக்கே இந்தநிலை என்றால் இலங்கையில் பொதுமக்களின் நிலையை என்னவென்று சொல்வது என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

You might also like