வவுனியாவில் யானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை!

காட்டு யானையொன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குழப்பம் விளைவிக்க முயற்சித்த யானை ஒன்றை வனவளத்துறை உத்தியோகத்தர் ஒருவர்துப்பாக்கியினால் சுட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து வவுனியா வனவளத்துறை காரியாலயத்தில்அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும்வனவளத்துறை அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா – ஓமந்தைப் பகுதியில் உள்ள கொம்புவைத்த குளத்துக்கு அருகில் உள்ள பாரிய குழி ஒன்றில் சில யானைகள் சிக்குண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாரிய குழி ஒன்றில் வீழ்ந்த நான்கு யானைகளை மீட்கும் போது, யானையொன்று உயிரிழந்தது.

அவற்றை மீட்ட போது, ஆண் யானை ஒன்று வனவளத்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டது.

இதன்போது வனவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கித் தாக்குதலில் யானைஉயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் தேடி வந்த யானைகளே இவ்வாறு குழியில் வீழ்ந்ததாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

You might also like