அடுத்த வாரம் ஏற்படப்போகும் மாற்றம்! யாழ்.குடாநாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

சூரியன் கடந்த சில் தினங்களாக இலங்கைத் தீவில் நேர் உச்சம் கொடுத்திருந்தது. இதனால் நாட்டில் பல பிரதேசங்களின் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்தது.

குறிப்பாக யாழ்.குடாநாட்டில் மாவிட்டபுரம், வல்லிபுரம் பகுதிகளில் நண்பகல் நேரத்தில் சூரியன் நேர் உச்சம் கொடுத்திருந்தது.

இதன் காரணமாக யாழ். குடாநாட்டின் அதியுச்ச வெப்பநிலை 34.9 செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது.இந்த வெப்பநிலை குறிப்பாக கடந்த 13, 14ம் திகதிகளில் இருந்ததாக யாழ்.பிராந்திய வளிமண்டலவியல் திணைக்கள பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய வெப்பநிலை சற்று குறைந்தளவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காற்றின் வேகம் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகவுள்ளது.

ஆனால் இனிவரும் வாரம் அதாவது எதிர்வரும் 25ம் திகதிக்குப் பின்னர் காற்றின் வேகம் குறைவடையும் எனவும், எனவே மாதத்தின் இறுதிக் காலப் பகுதியில் அதியுச்ச வெப்பநிலை 36 செல்சியஸ் அளவைத் தாண்டக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது எனவும் வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இக்காலங்களில் யாழ்.குடாநாட்டில் உள்ள மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like