குழந்தையொன்றைப் பிரசவித்து காட்டில்வீசிய தாய் கைது!

பிறந்த பச்சிளம் குழந்தையை காட்டில் வீசியெறிந்த தாயொருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம் அருகே மாதம்பை – ஹேனேபொல, கல்முருவ பிரதேசத்தில் வசித்த 37 வயதான திருமணமாகாத பெண்ணொருவரே  இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை தனது வீட்டில் வைத்து குழந்தையொன்றைப் பிரசவித்துள்ள அவர், அதனை அயலில் இருந்த காட்டுப் பகுதியில் வீசியெறிந்துள்ளார்.

மாடுமேய்க்கச் சென்ற ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு, பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளார்.

இதன் பின்னர் குழந்தை பொலிஸாரினால் மீட்கப்பட்டு தற்போது சிலாபம் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் என்று சந்தேகிக்கப்படும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like