கிளிநொச்சியில் 58ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து 58ஆவது நாளாக இன்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லாட்சி அரசு ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதும் தங்களது உறவுகள் தொடர்பில் இதுவரை எந்த பதில்களையும் தரவில்லை.

தங்களது உறவுகளைத் தடுத்து வைத்துள்ள மறைமுக தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

தங்களது உறவுகள் தொடர்பில் உரிய பதிலை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like