தீர்வு கிடைக்காத நிலையில் 28ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி கரைச்சி பன்னங்கண்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்தும் 28ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இரணைமடு குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்படும் போது பயிர் செய்கைக்கென தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட சரஸ்வரதி கமம் பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் காணிகளற்ற 120 வரையான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன.

இந்த நிலையில் மீள்குடியமர்வின் பின்னர் காணி உரிமம் இன்மையால் இவர்களுக்கான வீட்டுத்திட்ட வசதிகள் உள்ளிட்ட எதனையும் வழங்க முடியாத நிலையில் இருந்து வருவதனால் மக்களின் கோரிக்கைகளை அரச அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ நிறைவேற்ற முடியாத நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான தீர்வாக குறித்த காணி உரிமையாளர் தாமாக முன்வந்து காணியினை வழங்கும் போது தான் இதற்கான தீர்வைப் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

You might also like