கிளிநொச்சியில் பெண்களை வழிமறித்து நீண்டநேரம் காக்க வைக்கும் பொலிஸார் : மக்கள் விசனம்

கிளிநொச்சி – பளைப்பகுதியில் பொலிஸாரின் செயற்பாடுகள் அத்துமீறி உள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்புக்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளைப்பகுதியில் வீதி போக்குவரத்து கண்காணிப்புக்களில் ஈடுபட்டு வரும் பொலிஸார் பெண்களை வழிமறித்து அவர்களை நீண்டநேரம் காக்க வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை ஏனைய வாகனங்களை வழிமறித்து உரிய ஆவணங்களை பரிசோதனை செய்துவிட்டு அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை விட பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் உரிய முறையில் விசாரணை செய்யப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டியள்ளனர்.

இதேவேளை குடும்பப்பிணக்கு தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக நேற்று (17.04.2017) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற திறந்த மன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like