இவன் வேற மாதிரி திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு நடந்த சோகம் : இவருக்கு இப்படியொரு நிலையா..?

தமிழ் சினிமாவில் தற்போது பல வாரிசு நடிகர்கள் நடிகர்களாக திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். இருப்பினும் இதில் பல வாரிசு நடிகர்கள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் பிரபலமாகாத நிலையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் உள்ளார்கள். இப்படி இருக்கையில் தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பிற்கு ஒரு உதாரணமாக விளங்கியவர் சிவாஜி கணேசன் இவரை தொடர்ந்து இவரது மகனான இளைய திலகம் பிரபு அவர்கள் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபல நட்சத்திரமாக உள்ள நிலையில் இவரது மகனான விக்ரம் பிரபுவும் திரைபடங்களில் கதாநாயகனாக வலம் வந்த உள்ளனர்.

திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் என்றாலே ஆடம்பர வாழ்க்கையும், சொகுசான வாகனமும் தான் அனைவரது மனக்கண் முன்பும் தோன்றும். ஆனால் அப்படியில்லாமல் அரசு மருத்துவமனையில் ஒரு நடிகை சிகிட்சை பெறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் கதாநாயகி சுரபிக்கு அம்மாவாக நடித்தவர்தான் ஷர்மிளா. பிஸியான மலையாள நடிகையான இவர், 40 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் தமிழில் குறைவான படங்களிலேயே நடித்திருக்கிறார்.

இவர் ‘காபூல்வாலா’ என்ற படத்தின் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். நல்லதொரு குடும்பம், உன்னைக் கண்தேடுதே படங்களில் தமிழில் நடித்திருந்தார்.

ஷர்மிளாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்தோ பிரச்னை இருந்திருக்கிறது. இதற்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவருகிறார்.

ஆஸ்பத்திரியில் சேர்ந்த பின்புதான் இவர் நடிகை என மருத்துவர்கள் வட்டாரத்துக்கு தெரியுமாம். ‘பணம் இல்லாதவங்களுக்கு அரசு மருத்துவமனைதானே துணை’ என கூலாக சொல்லிவிட்டு சிகிட்சைக்கு பின்னான ஓய்வில் கவனம் செலுத்தி வருகிறார் சர்மிளா.

You might also like