‘’திருடர்கள் இல்லாத ஜாதியே இல்ல : எல்லா ஜாதிலையும் பெரிய பெரிய திருடர்கள் இருக்காங்க’’ சாட்டையடி வசனத்தோடு வெளியாகிய சூர்யாவின் ஜெய்பீம் பட டீஸர்

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து சினிமா துறையை கலக்கி வருபவர் நடிகர் சூர்யா.இவர் தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வெளியாக இருக்கும் சூரரை போற்று படத்திற்காக அவரது ரசிகர்கள் பெரும் அவளாக காத்து வருகிறார்கள்.மேலும் இது இந்த கொரோன காலத்தில் ரிலீஸ் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்த அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதை ஒடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிட போகிறார்கள்.மேலும் இதனை நடிகர் சூர்யா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.சூர்யாவின் ஜெய்பீம் படத்தின் டீசர் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சினிமா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது.

அதிலும் இவருடைய பல படங்கள் அறிவியல் சார்ந்த படங்களாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களாகவும் இருக்கும். மேலும், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் பல படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2 ஆம் தேதி முன்னிட்டு பிரைம்மில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். பழங்குடியின பெண்ணின் பிரச்சனைக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தற்போது வெளியாகி உள்ளது.

டீசரில் இறுதியில் இந்த ஜாதி என்றாலே திருட்டு வழக்கில் கைது செய்யப்படுவது சகஜம் சார் என்று ஒருவர் சொல்ல அதற்கு பதிலளிக்கும் சூர்யா திருடர்கள் இல்லாத அதற்கு இருக்கா நட்ராஜ்? உங்க ஜாதி எங்க ஜாதி என எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

இவர் கூறிய வசனம் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த படம் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

You might also like