நடிகர் விஜயை அவரது மனைவி சங்கீதா திட்டினாரா..? என்னதான் நடந்தது..? உண்மையை போட்டுடைத்த பிரபலம்

தென்னிந்திய அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவராகவும் முன்னணி நடிகர்களில் முதன்மையானவராகவும் வலம் வருபவர் எல்லாராலும் செல்லமாக தளபதி என அழைக்கப்படும் தளபதி விஜய் அவர்கள். இவரது நடிப்புக்கு பட்டி தொட்டி முதல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளம் அதிக அளவில் உள்ளது . மேலும் மக்களை தாண்டி திரையுலகிலேயே இவரது நடிப்புக்கு பல நடிகர் நடிகைகள் ரசிகர்களாக உள்ளார்கள். இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடபட்டது. இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் தளபதி அவர்கள் தற்போது நடித்து வரும் தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

மேலும் தளபதி 65படத்தின் தலைப்பும் வெளியானது. அனைவரும் அந்த தலைப்பு டார்கெட் என இருக்கும் என எண்ணிய நிலையில் அதற்கு மாறாக பீஸ்ட் என அந்த படத்திற்கு தலைப்பு வைத்து இருந்தனர் பட குழுவினர்.

மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்குகிறார் மற்றும் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வெளியிட உள்ளனர்.

தளபதி இதுவரைக்கும் ஆங்கில தலைப்பில் லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரண்ட்ஸ், மாஸ்டர் என நான்கு படங்கள் நடித்துள்ளார் இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பும் ஆங்கிலத்தை மையமாக வைத்து வெளியாக உள்ளது.

தளபதி விஜய் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் செய்த ஒரு விஷயத்தால் சங்கீதா, விஜய்யை திட்டி தீர்த்தாக நடிகர் சாந்தனு கூறியுள்ளார்.இதற்கு காரணம், நடிகர் சாந்தனுவின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், அவர் கையால் தாலி எடுத்துக்கொடுத்த தான் சாந்தனு, கீர்த்தி திருமணம் நடைபெற்றது.

இதனை விஜய் தனது மனைவி சங்கீதாவிடம் கூறியபோது, திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுப்பது என்பது பெரியர்வர் செய்யவேண்டிய விஷயம், என்று கூறி விஜய்யை திட்டீனாராம் சங்கீதா.இந்த விஷயத்தை நடிகர் சாந்தனு ஒரு Interview-வில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

You might also like