நிமோனியா காய்ச்சலுக்கு இரையாகிய ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை

களுவாஞ்சிகுடி, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகிழுர் கண்ணகிபுரத்தில் நிமோனியா காய்ச்சலால் ஒன்றரை மாதக் குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது.

கண்ணகிபுரத்தைச் சேர்ந்த முரளிதரன் சன்சுதி எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குழந்தை சுமார் இரண்டு வாரங்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரளிதரன் சன்சுதி உயிரிழந்துள்ளார்.

குறித்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தமையால் மகிழுர் பிரதேசம் முழுவதும் சோகமயமாக காட்சியளிக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிமோனியா காய்ச்சல் காரணமாக இதுவரைக்கும் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like