தமிழ் சினிமாவில் நீங்க இப்படி ஒரு காதல் ஜோடிய பார்த்திருக்க மாட்டிங்க : 60 வயசுல 35 வயது நடிகையை திருமணம் செய்த இயக்குனர் : காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இருந்து பல வயது வேறுபாடுகளில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் எல்லாம் இருக்கின்றனர். அப்படி தமிழில் ஒரு பிரபலமான இயக்குனராக வளம் வந்து கொண்டு இருந்தவர் வேலுபிரபாகரன். இவர் இதுவரை நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், சிவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார். இப்போது அவர் அவரின் படத்திலேயே நடித்த தன்னைவிட வயதில் மிகவும் குறைவான நடிகையை திருமணம் செய்துள்ள சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.இவர் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஒரு இயக்குனரின் காதல் கதை. இந்த படத்தில் நடித்து இருந்த நடிகை தான் ஷெர்லி. மேலும், இந்த படத்தில் இருந்து இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

பின் இவர்களுடைய நட்பு கடைசியாக திருமணத்தில் முடிந்தது. இவர்களுடைய திருமணம் குறித்து வேலு பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது, நம்முடைய நாட்டில் என் வயதுக்கு இணையாக இருக்கிற யாரும் என்னை திருமணம் செய்ய மாட்டார்கள்.

அதனால் தான் இந்த வயதில் ஏன் இப்படி ஒரு இளம் பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன் என்ற ஒரு கேள்வி அனைவருக்குமே எழும் . அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட தன்னுடைய 74வது வயதில் திருமணம் செய்தார்.

அவர் மனைவி மிக இளமையானவர். பொதுவாகவே வாழ்க்கையில் அனைத்து மனிதருக்கும் ஆதரவும், துணையும் தேவை. ஷெர்லி போன்ற சிறந்த துணை கிடைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். அதோடு நான் ரொம்ப அதிஷ்டசாலி. ஷெர்லி என்னை நன்கு புரிந்து வைத்துள்ளார்.

இந்த வயதில் கூட ஷெர்லி எனக்கு கிடைத்தது இயற்கையே எனக்களித்த பரிசு என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த திருமணம் குறித்து நடிகை ஷெர்லி கூறியது வேலு நேர்மையான,

உண்மையான மனிதன். அவரை நான் நன்கு புரிந்து வைத்துள்ளேன். எங்கள் இருவருடைய கருத்தும் ஒத்துப்போவதனால் தான் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம் என்றார்

You might also like