மேக்கப் போடாமல் அக்காவும் தங்கையும் வெளியிட்ட புகைப்படம்.. நடிகை சாய் பல்லவிக்கு குவியும் லைக்ஸ்

வெள்ளித்திரை சினிமாவை பொருத்தவரை நடிகையாக வேண்டும் என்றால் அவ்வளவு எளிது அல்ல. அப்படியே நடிகை ஆனாலும் சினிமாவில் மற்றும் மக்களிடையே பிரபலமாவதற்கு எப்படியும் பல வருடங்கள் ஆகும்.இந்த வகையில் தான் நடித்த முதல் படத்திலேயே சினிமாவில் மட்டுமின்றி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பையும் புகழையும் அடைந்தவர் என்றால் அது நம் ப்ரேமம் மலர் டீச்சர் சாய் பல்லவி தான். கேரள மொழியில் நிவின் பவுலி கதாநாயகனாக நடிக்க அதில் மூன்று கதாநாயகிகள் நடித்திருந்த திரைப்படம் ப்ரேமம். இது தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டது.இந்த படத்தில் கல்லூரி ஆசிரியாராக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் சாய் பல்லவி. இவரை சாய் பல்லவி என அழைப்பவர்கள் தாண்டி மலர் டீச்சர் என அழைப்பவர்கள் தான் அதிகம் அந்த அளவுக்கு அந்த படத்தில் இவரின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அதன் பின் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் நடிகையாக ஒப்பந்தாமானார். இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தது மட்டுமின்றி அவர் அந்த படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய இவரது நடனம் யூடுபில் படு வைராலாக போனது.

28-வயதான சாய் பல்லவி டாக்டர் படிப்பை முடிந்திருந்த போதும் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தால் அதை விடுத்து சினிமாவில் நடிகையாக தொடர ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவாராக உள்ளார். அது மட்டுமின்றி இவர் உங்களில் யார் பிரபுதேவா நடன

நிகழ்ச்சியில் போட்டிளாராக கலந்து கொண்டு இறுதி வரை சென்றுள்ளார்..எல். விஜய் இயக்கத்தில் தமிழில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி.

ஆனால் இதற்கு முன்பே, மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம், தென்னிந்திய அளவில் இவருக்கு புகழை பெற்று தந்துவிட்டது.

தியா படத்தை தொடர்ந்து தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் என்.ஜி.கே என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.இவர் தற்போது, நடிகர் ராணாவுடன் விராட பருவம் மற்றும் நாணியுடன் ஷாம் சிங்கராய் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது தங்கை பூஜாவுடன் இணைந்து துளி கூடம் மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

You might also like