விஜய்யை பார்த்து அந்த ஒரு வார்த்தை சொல்ல பயந்தேன்! கில்லி தங்கச்சி ஜெனிபர்

விஜய்யின் சூப்பர்ஹிட் படமான கில்லியில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தவர் ஜெனிபர், அந்த படத்தின் அவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் விஜய்யை டா போட்டு பேசும் வசனத்தை பேச பயந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

“ரயிலில் போகும்போது மயக்க மருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்து ஏமாத்தினதாக அப்பாகிட்ட சொல்ற சீன் இருக்கும். அதை மட்டும் என்னால மறக்கவே முடியாது. அந்த சீன் விஜய் அண்ணா கையில் வைச்சிட்டு பேசற பிஸ்கெட் பாக்கெட், குச்சி எல்லாத்தையும் என்கிட்டேதான் வீசுவாங்க.

அந்த சீன்ல, ‘பதிலைச் சொல்றா’ என்கிற டயலாக் வரும். அதைச் சொல்லசொன்னதுமே நான் பயங்கரமா ஷாக் ஆயிட்டேன். தயங்கி, தயங்கி நின்னுட்டு இருந்தேன். விஜய் அண்ணாதான் எனக்கு தைரியம் சொல்லி அந்த டைலாக்கை பேச வைத்தார்” என தெரிவித்துள்ளார்.

You might also like