இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதத்தின் முதல் வாரம் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரபால இதனைத் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் எனவும், அதனுடன் வெப்பமான காலநிலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சூரியம் உச்சம் கொடுத்தமையினால் மாலை நேரங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யாமை, வானில் மேகம் குறைவாக காணப்படுதல் மற்றும் காற்று குறைதல் ஆகியவைகள் இந்த காலநிலைக்கு காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களான நிலவும் கடும் வெப்பம் காரணமாக பல்வேறுபட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளதுடன், பலர் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like