மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் முழு குடும்பத்தையும் இழந்து தவிக்கும் சிறுவன்

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்னும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

14 வயதுடைய பசிந்து சன்கல்ப பத்திரண என்ற இந்த மாணவன் குறித்த அனர்த்தத்தில் தனது முழு குடும்பத்தயும் இழந்துள்ளார்.

“புதுவருட உணவு பொதி ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் போது, வீட்டு பக்கத்தில் இருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டது. மண் மேட்டினால் வீடு முழுமையாக மூடப்பட்டிருந்தனை கண்டேன். எனது வீடு இருந்த இடத்தை நான் மீண்டும் வந்து பார்க்கும் போது மண் மேடு ஒன்றையே காண முடிந்தன.

நண்பர் வீட்டிற்கு உணவு கொண்டு சென்றமையினால் எனது உயிர் தப்பியது, எனினும் எனது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தின் பலரது உயிர் காப்பற்றப்படவில்லை என பசிந்து என்ற மாணவன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட, வேழுவன வித்தியாலயத்தில் தரம் எட்டில் குறித்த மாணவன் கல்வி கற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் பசிந்துவின் தந்தை, தாய், இரண்டு சகோதரர்கள் மற்றும் குறித்த பகுதியை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர்.

You might also like