சற்று முன் வவுனியாவில் சிறுமி கடத்தல் முயற்சி முறியடிப்பு

வவுனியாவில் இன்று (02.01.2016) மாலை 5மணியளவில் சிறுமி ஒருவரை கடத்தும் முயற்சி வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து முறியடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

சமூகவலைத்தளம் மூலமாக தொடர்பினை மட்டக்களப்பிலிருந்து ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியிலுள்ள 16வயதுடைய சிறுமியுடன் தொடர்பினை ஏற்படுத்தி பல காலமாக பழகிவந்தள்ளார்.

இன்று (02.01.2016) மாலை வவுனியா பேரூந்து நிலையத்திற்கு வருமாறு குறித்த இளைஞன் அழைத்துள்ளார். குறித்த சிறுமியும் இளைஞனின் வார்த்தைக்கு இணங்கி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடுதுணிகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.

சிறுமி வீட்டிலிருந்து வெளியேறுவதாக தந்தைக்கு அயலவர்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தந்தை உடனடியாக வவுனியா வர்த்தக நிலையத்தில் பணிபுரியும் உறவினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். பேரூந்து நிலையத்தில் காத்திருந்த உறவினர் சிறுமி பேரூந்தில் வந்து இறங்கியதும் குறித்த இளைஞர் பேரூந்து தரிப்பிடத்தில் சிறுமியை அழைத்துச் செல்ல தயாராக இருந்ததையடுத்து காத்திருந்த உறவினர்கள் குறித்த இருவரையும் கடுமையாகத்தாகியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினரால் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like