நடிகை வரலக்ஷ்மியின் அம்மாவினை பார்த்திருக்கிறீர்களா..? அவங்க இப்போ எப்படி இருக்காங்க என்று பாருங்க : புகைப்படம் இதோ

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர்களை தாண்டி வாரிசு நடிகைகளும் படங்களில் நடித்தி வருகின்றனர். அந்த வகையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மி யை அனைவருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். சரத்குமாரை உரித்து வைத்தாற்போல் அப்படியே இருக்கும் வரலக்ஷ்மி படங்களிலும் அவருக்கு சற்றும் நடிப்பில் குறையாமல் நடித்து வருகிறார். 36-வயதான வரலக்ஷ்மி வெளிநாட்டில் கல்லூரி படிப்பை முடித்து நடனத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நடன கலையை கற்று கொண்டு பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் வரலக்ஷ்மி பிரபல இயக்குனர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிக்க தேர்வானார்.

மேலும் சரோஜா, காதல் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அந்த வாய்ப்பை தவறவிட்டார். இந்நிலையில் 2012-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் இவரது நடிப்பு மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் வரலக்ஷ்மி. தாரை தப்பட்டை படத்தில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது.மேலும் இவர் நிபுணன், சண்டகோழி 2, மாரி 2, சத்யா,ச ர்கார் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

வரலக்ஷ்மிக்கு கதாநாயகி கேரக்டரை விட நெகட்டிவ் கதாபாத்திரங்களே அற்புதமாக பொருந்துகிறது.தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகை வரலக்ஷ்மி.நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மியின்

அம்மா சாயா தேவி, பல வருடங்களுக்கு முன்பு இவரை விவாகரத்து செய்த சரத்குமார். நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.மேலும் நடிகை வரலக்ஷ்மி தனது அம்மாவை விட்டு பிறந்தாலும் கூட சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது அம்மாவின் 60வது பிறந்தநாளை அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் வரலக்ஷ்மி.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது அவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மி.

You might also like