ஆசிய அளவில் இலங்கை இளைஞன் செய்த சாதனை

ஆசியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் இலங்கையில் இளம் வீரரான எரான் குணவர்தன வெற்றி பெற்றுள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள் இம்மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் தாய்லாந்தில் நடைபெற்றது.

இதில் ஐப்பான் நாட்டின் வீரர் டெட்சுயா புஜீடா முதலாம் இடத்தினை கைப்பற்றியதுடன், இலங்கை இளம் வீரரான எரான் குணவர்தன இரண்டாமிடத்தை பெற்றார்.

இருப்பினும் சிறிய வயதில் சாதனையினை படைத்த எரான் குணவர்தனவை வரவேற்கும் நிகழ்வானது இன்று காலை இடம்பெற்றதுடன், இதில் மோட்டார் பந்தய வீரரான டிலந்த மாலகமுவவும் கலந்து கொண்டார்.

இருப்பினும் ஆசிய வீதியோட்ட மோட்டார் சைக்கிள் பந்தய அடுத்த கட்ட போட்டிகள் எதிர்வரும் 03 ஆம் மற்றும் 04 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like