டெங்குவால் பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

டெங்குக் காய்ச்சல் காரணமாக கிண்ணியா, குறிஞ்சாங்கேணி பொலிஸ் உத்தியோகத்தரொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 44 வயதான அபூ ஹனீபா நயீம் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடந்த 13ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இவருக்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டியமையால் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி முதல் இதுவரையில் திருகோணமலை மாவட்டத்தில் 17 பேர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like