கிளிநொச்சியில் அன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு

தமிழின விடுதலைக்காக அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம் அன்னை பூபதியின் 29ஆவது நினைவுகூரல் ஆண்டு நிகழ்வு கிளிநொச்சியில் நடைப்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அலுவலகமான அறிவகத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணித் தலைவர் சு.சுரேன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், முதல் நிகழ்வாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட உணர்வாளர்களால் மலர் வணக்கம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like