முல்லைத்தீவில் பாராளுமன்ற உறுப்பினரை வழி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள்

முல்லைத்தீவில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை வழி மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முள்ளியவளை மாஞ்சோலை வாராந்த சந்தை வர்த்தகர்களே ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை இன்று(02) முன்னெடுத்திருந்தார்கள்.

சென்ற மாதம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட வர்த்தகம் தொடர்பான தீர்மானங்கள் சில மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும், வர்த்தகர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், “நான் கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கு கொள்ளவில்லை. இத்தீர்மானம் எதற்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அதிகாரிகள் அரசியல் தலைமைகள் அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவை நான் தனித்து மாற்றம் செய்ய முடியாது. அனைவருடனும் கலந்துரையாடியே நான் இதற்கு ஒரு முடிவைத்தர முடியும்” என காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

You might also like